vivo ரசிகர்களே! புது போன் வருது! Vivo Y300 5G இணையதளத்தில் லீக்.!

vivo ரசிகர்களே! புது போன் வருது! Vivo Y300 5G இணையதளத்தில் லீக்.!

Vivo Y300 5G : தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் இணையதளத்தில் நடைபெற்ற பிக் பேங் தீபாவளி விற்பனை என்ற சிறப்பு விற்பனையில் விவோ Y300 5G ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 32MP செல்ஃபி கேமரா, வேகமான சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

தற்போது, ​​பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் விவோ Y300 5G ஸ்மார்ட்போன் ரூ. 19,490 விலையில் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

Vivo Y300 5G Specifications

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள்: இந்த போன் 6.67-இன்ச் முழு HD பிளஸ் E4 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல்கள், (120Hz refresh rate)  120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்  (1800 nits of peak brightness) 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.

புதிய Vivo Y300 5G போன், Octa Core Snapdragon 4 Gen 2 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இந்த போனில் Adreno 619 GPU கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.

vivo ரசிகர்களே! புது போன் வருது! Vivo Y300 5G இணையதளத்தில் லீக்.!

பிரைமரி கேமரா 

Vivo Y300 5G போனில் 50MP Sony IMX882 பிரைமரி கேமரா + 8MP போர்ட்ரெய்ட் கேமராவின் இரண்டு பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த Vivo போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32MP கேமராவும் உள்ளது. இது தவிர, இந்த போனில் Aura Light யூனிட் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் போன்ற அம்சங்களும் உள்ளன.

இந்த Vivo Y300 5G ஸ்மார்ட்போனில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு உள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான Vivo போன் நினைவக விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது, நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்

இந்த ஸ்மார்ட்போனில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 AC, Bluetooth 5.0, GPS, GLONASS, மற்றும் USB Type-C போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. USB Type-C ஆடியோ, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் Vivo Y300 5G ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன.

Vivo Y300 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வேகமான சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனயை சில நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதேபோல், இந்த Vivo ஸ்மார்ட்போனில் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு உள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال