ரூ. 9499 விலையில் ஸ்மார்ட்போன்:
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம் ரூ. 10499 ஆகவும், 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம் ரூ. 11499 ஆகவும் இருந்தது. தற்போது, 6ஜிபி வேரியண்டை ரூ. 9499க்கும், 8ஜிபி வேரியண்டை ரூ. 10499க்கும் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
மூன்று கலர் வகைகள்:
இதனுடன், பிளிப்கார்ட் அக்சஸ் கிரெடிட் கார்டு மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் புதினா பச்சை, சாடின் கருப்பு மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண வகைகளில் வாங்குவதற்கு கிடைக்கிறது.
6.88-இன்ச் பெரிய டிஸ்ப்ளே:
Poco M7 5G ஸ்மார்ட்போனில் (120Hz refresh rate) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.88-இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது (600 nits peak brightness) 600 nits பீக் பிரைட்னஸ், (240Hz touch sampling rate) 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே TUV சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் சிப்செட், 4 ஆண்டுகள் வரை அப்டேட்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் (Qualcomm Snapdragon 4 Gen 2 ) ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும் 4 ஆண்டுகள் வரை பாதுகாப்பு அப்டேட்களையும் பெறும்.
50MP சோனி கேமரா, வேகமான சார்ஜிங் ஆதரவு:
IP52 மதிப்பீட்டில்: இணைப்பைப் பொறுத்தவரை, Poco ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, ப்ளூடூத், Wi-Fi, USB-C சார்ஜிங் போர்ட் உள்ளது. பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP52 மதிப்பீட்டில் தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்புத் திறன் கொண்டது.