50MP கேமரா, Curved டிஸ்பிளே மற்றும் இராணுவ தர சான்றிதழ் கொண்ட 5G போனில் ரூ. 1500 தள்ளுபடி!

50MP கேமரா, Curved டிஸ்பிளே மற்றும் இராணுவ தர சான்றிதழ் கொண்ட 5G போனில் ரூ. 1500 தள்ளுபடி!

iQOO Z10R ஸ்மார்ட்போன்: இந்திய சந்தையில் iQOO Z10 தொடரிலிருந்து பல மாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. iQOO Z10R ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இது பட்ஜெட் விலையில் சிறந்த விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனியில் (Curved AMOLED ) டிஸ்ப்ளே மற்றும் 50MP முன் கேமரா உள்ளது. தற்போது, ​​இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

iQoo Z10R ஸ்மார்ட்போன் தற்போது அமேசானில் 8GB RAM + 128GB மெமரிக்கு ரூ.19,498க்கும், 8GB RAM + 256GB மெமரிக்கு ரூ.21,498க்கும், 12GB RAM + 256GB மெமரிக்கு ரூ.23,498க்கும் கிடைக்கிறது. அமேசான் தற்போது இந்த போன்களில் தள்ளுபடியை வழங்குகிறது.

ரூ.1500 தள்ளுபடி:அமேசானில் ஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit card) மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (ICICI credit card) களுக்கு அதிகபட்சமாக ரூ.1500 தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் மற்றும் அக்வா மரைன் கலர் வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் MIL STD 810H இராணுவ தர சான்றிதழ், SGS சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது (Dust & Water Resistant)  IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டது.

50MP கேமரா, Curved டிஸ்பிளே மற்றும் இராணுவ தர சான்றிதழ் கொண்ட 5G போனில் ரூ. 1500 தள்ளுபடி!

iQOO Z10R ஸ்மார்ட்போன் அம்சங்கள் & விவரங்கள்:இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்வுடன் 6.77-இன்ச் (Curved AMOLED) காவர்டு டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது (1800 nits) 1800 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே Schott Xensation கண்ணாடி பாதுகாப்புடன் கிடைக்கிறது.

சிப்செட், OS விவரங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் 4nm MediaTek Dimensity 7400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது Android 15 அடிப்படையிலான Funtouch OS 15 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 Android OS அப்டேட்களையும் 3 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் பெறும். வெப்ப மேலாண்மைக்கான குளிரூட்டும் அறை இதில் உள்ளது.


50MP கேமரா, 32MP செல்ஃபி கேமரா:கேமரா துறையைப் பொறுத்தவரை, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவுடன் 50MP சோனி IMX882 பின்புறம் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமரா 4K அல்ட்ரா கிளியர் வீடியோ அம்சத்தை ஆன்டி-ஷேக் ஆதரவுடன் ஆதரிக்கிறது. மேலும் இது 2MP இரண்டாவது கேமராவையும் கொண்டுள்ளது.

கூடுதலாக, பின்புறத்தில் ஆரா லைட் நிறுவப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32MP கேமரா நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புற மற்றும் முன் கேமராக்கள் மூலம் 4K வீடியோக்களை 30fps இல் பதிவு செய்ய முடியும். இந்த போனில் 44W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5700mAh பேட்டரி உள்ளது.


இணைப்பின் அடிப்படையில் இந்த போனில் 5G, 4G LTE, WiFi 6, Bluetooth 5.4, USB-C சார்ஜிங் போர்ட் உள்ளன. பாதுகாப்பிற்காக இது இன்-டிஸ்ப்ளே  சென்சார் கொண்டுள்ளது. மேலும் சிறந்த ஆடியோ ஆதரவிற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال