இந்த ஒண்ணுமே இல்லாத கம்பெனி போனுக்கு ரூ.2000 தள்ளுபடி.. 50MP+50MP கேமராக்கள், 6 ஆண்டுகள் வரை அப்டேட்கள்..!

இந்த ஒண்ணுமே இல்லாத கம்பெனி போனுக்கு ரூ.2000 தள்ளுபடி.. 50MP+50MP கேமராக்கள், 6 ஆண்டுகள் வரை அப்டேட்கள்..!

பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நத்திங் சப் பிராண்ட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் CMF போன் 2 ப்ரோ 5G மாடலை அறிமுகப்படுத்தியது. மென்பொருளைப் பொறுத்தவரை சிறந்த அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த போன் மிகவும் பொருத்தமானது. கூடுதலாக, இந்த போன் பல சுவாரஸ்யமான விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. தற்போது, இந்த போனில் அதிகபட்சமாக ரூ.2000 தள்ளுபடி பெறலாம்.

CMF Phone 2 Pro 5G ஸ்மார்ட்போன் மே மாதம் விற்பனைக்கு வந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், 8GB RAM + 128GB மெமரி வகையின் விலை ரூ. 18,999 ஆகவும், 8GB RAM + 256GB மெமரி வகையின் விலை ரூ. 20,999 ஆகவும் இருந்தது. தற்போது இந்த போனில் Flipkart-ல் தள்ளுபடி பெறலாம்.

இந்த வங்கி கார்டுகளுக்கான தள்ளுபடிகள்:
ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பிளிப்கார்ட்டில் CMF போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.2000 தள்ளுபடி பெறலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI பரிவர்த்தனைகள் வடிவில் பணம் செலுத்தினால், ரூ.1000 தள்ளுபடி பெறலாம்.

கலர் 

கலர் வகைகள்:இதனுடன், IDFC வங்கியிலிருந்து EMI செலுத்துதலில் அதிகபட்சமாக ரூ. 2000 தள்ளுபடியைப் பெறலாம். இருப்பினும், இந்த தள்ளுபடி சலுகைகள் எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்த CMF ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண வகைகளில் கிடைக்கிறது.
இந்த ஒண்ணுமே இல்லாத கம்பெனி போனுக்கு ரூ.2000 தள்ளுபடி.. 50MP+50MP கேமராக்கள், 6 ஆண்டுகள் வரை அப்டேட்கள்..!

டிஸ்ப்ளே

AMOLED டிஸ்ப்ளே:CMF போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது . இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,  மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட்க் கொண்டுள்ளது. இது HDR10+ ஐ ஆதரிக்கிறது. இந்த போன் பாண்டா கிளாஸைப் பெறுகிறது.

6 ஆண்டுகள் வரை அப்டேட்கள் :

இந்த கைபேசி MediaTek Dimensity 7300 Pro சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Nothing OS 3.2 இல் இயங்குகிறது. இந்த CMF ஸ்மார்ட்போன் 3 ஆண்டுகள் Android OS அப்டேட்களையும் 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களையும் பெறும்.
50MP டெலிஃபோட்டோ கேமரா:கேமரா துறையைப் பொறுத்தவரை, இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த போனில் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 தொழில்நுட்பம் உள்ளது. இந்த கைபேசியில் EIS (எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவுடன் 50MP முன் கேமராவும், 50MP டெலிஃபோட்டோ 8MP அல்ட்ராவைடு லென்ஸும் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இது 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது .

CMF Phone 2 Pro 5G ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது . இது ஒரு சார்ஜர் மற்றும் ஒரு போன் கேஸுடன் வருகிறது. இது IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது 5G, 4G, WiFi 6, Bluetooth 5.3 மற்றும் USB-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال