Poco F7 specifications
போக்கோ எப்7 அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் 7550mAh பேட்டரி உள்ளது. மேலும் இது IP66 + IP68+ IP69 Supported தரப்பட்டுள்ளது உங்கள் போனை பாதுகாக்கும். (நீங்கள் தண்ணீரில் முக்கிய எடுத்தால் அதற்கு சப்போர்ட் செய்யாது) மழைக்காலங்களில் சாரல் மலைகள் பட்டால் மட்டுமே சப்போர்ட் பண்ணும்.
போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் விலை, விற்பனை:
Poco F7 5G Sale: இந்த போன் (போக்கோ எஃப்7 5ஜி விற்பனை) 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 31999, 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 33999. ஜூலை 1 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனை தொடங்கும். எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி கார்டுகளில் ரூ. 2000 தள்ளுபடி பெறலாம்.
இந்த போனை ரூ.29,999 ஆரம்ப விலையில் வங்கி தள்ளுபடியுடன் வாங்கலாம். 12 மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பமும் உள்ளது. ஆரம்ப விற்பனையின் ஒரு பகுதியாக 1 வருட இலவச டிஸ்ப்ளே ரிப்ளைமெண்ட் இது வழங்குகிறது.
Poco F7 5G ஸ்மார்ட்போன் 6.83-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைப் பெறுகிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது அலுமினிய மிடில் பிரேம் மற்றும் ஒரு கிளாஸ் பேனல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது IP66+ IP68+ IP69 சப்போர்ட் கொண்டது மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது.
இந்த செல்போனில் "Octa Core Snapdragon 8s Gen 4 4nm" சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது . இது 12GB LPDDR5X ரேம், மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது (Android 15) ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை வழங்கும் என்று போகோ தெரிவித்துள்ளது.
இந்த போக்கோ போன் இதுவரை மிகப்பெரிய பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 7550mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியுடன் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது . இது USB-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டுள்ளது.
கேமரா துறையைப் பொறுத்தவரை, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் PDAF ஆதரவுடன் கூடிய 50MP சோனி IMX882 கேமரா , 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 20MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. AI இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், AI Interpreter, மற்றும் (AI இமேஜ் எக்ஸ்பான்ஷன்) போன்ற AI அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 3D ஐஸ்லூப் அமைப்பு உள்ளது. இது கேமிங் மற்றும் பல்பணியின் போது சிறந்த செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனியில் Google Gemini, சர்க்கிள் டூ சர்ச், AI நோட்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் உள்ளன. இதில் ( In-display Fingerprint Sensor) இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது 5G, 4G, ப்ளூடூத் 6.0, வைஃபை 7, ஜிபிஎஸ், NFC போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.